திருவள்ளுவமாலை - மருத்துவன் தாமோதரனார் - 11

சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்

மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் – காந்தி

மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்

தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு


Thiruvalluva Maalai - Marutthuvan Dhamodharanar - 11

seendhthineerk kandam therisukkuth thaenalaai

mondhthapin yaarkkum thalaikkuththil – kaandhthi

malaikkuththum maalyaanai valluvar muppaalaal

thalaikkuththuth theervusaath thatrku


மருத்துவன் தாமோதரனார் - விளக்கம்

(பொ-ரை) மலையப் பகையென்று குத்தும் யானைபோலும் அரசே! சீந்திற் சருக்கரையும் சுக்குப் பொடியும் தேனுங் கலந்து மோந்தால், யாருக்குந் தலைவலி நீங்கிவிடும். திருவள்ளுவர் திருக்குறளைப் பார்த்தபின் சீத்தலைச்சாத்தனாருக்குப் பிறர் பாடல்களால் ஏற்பட்ட தலைவலி நீங்கிற்று.


Freehand Translation*

Trio of Sindhineer, crushed Sukku(dried ginger), Honey

cures headache upon Smell - O King valourous

as the elephants, headbutting Kandhi hills; Valluvan’s Trio (Muppaal)

similarly is the cure for Saathanaar’s headache

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Marutthuvan Dhamodharanar, yet!

Elephants headbutt hill considering it as a foe - poetic exaggeration

Saathanaar has always been a crtic and so much that he disturb’s himself when stumbled upon errata on reviewing subjects; Now that the thirukkural is perfect he can relax.

All are relieved of their headache by smelling the sindil-salt, and sliced dry ginger mixed with honey; but Sāttanār (a fellow-professor) was relieved of his head-ache (brought on by his habit of striking his head with his stylus when he found a fault in an author) by hearing the three parts of the Cural recited. [Emphasis in original] Edward Jewitt Robinson (2001). Tamil Wisdom: Traditions Concerning Hindu Sages and Selections from Their Writings. New Delhi: Asian Educational Services.


More from Wikisource

    சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
    மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
    மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
    தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு (11)

கருத்துரை: தன்பகை எனக்கோபித்து வெகுண்டு, மலையைக் குத்துகின்ற பெரிய களிறு போலுள்ள மன்னனே! சீந்திநீர்ச் சருக்கரையையும் சிதைக்கப்பட்ட சுக்கையும், தேனோடு கலந்து மோந்தபின்னால், தலைக்குத்து அதாவது தலைவலி உடையோர் யாராயினும் அவர்க்குத் தலைவலி தீர்ந்து போகும். திருவள்ளுவர் அருளிய திருக்குறளினாலே சீத்தலைச் சாத்தனார்க்குத் தலைக்குத்து/ தலைவலி தீர்ந்து போனது அதாவது இல்லாமல் போயிற்று.