திருவள்ளுவமாலை - மதுரைப் பாலாசிரியனார் - 52

    வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள்

    பொள்ளென நீக்கும் புறவிருளைத்-தென்னிய

    வள்ளுவ ரின்குறள் வெண்பா வகிலத்தோர்

    ருள்ளிரு ணீக்கு மொளி.


Thiruvalluva Maalai - Madurai Paalaasiriyanaar - 52

vaelli viyaalam vilangkuiravi venthingkal

polyena neekkum purairulai – thelliya

valluvar inkural vaenpaa akilaththor

ulirul neekkum oli


விளக்கம்

(பொ-ரை.) வெள்ளி வியாழன் கதிரவன் திங்கள் என்பன புறவிருளை நீக்கும் ஒளிகளாம். அவைபோலத் திருவள்ளுவரின் இனிய குறள் வெண்பா அகவிருள் நீக்கும் ஒளியாம். Tamilvu


Freehand Translation*

Venus, Jupiter, the Sun, soothing Moon

pierce and banish the external dark - Valluvan’s

beautiful kural couplet’s effulgence banishes

the masses’s internal dark

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Paalaasiriyanaar, yet!

Ulirul - internal dark = ignorance of the mind