திருவள்ளுவமாலை - கவுணியனார் - 51

    சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய

    வந்த விருவினைக்கு மாமருந்து-முந்திய

    நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்

    பன்னிய வின்குறள்வெண் பா.


Thiruvalluva Maalai - Kavuniyanaar - 51

sindhthaikku iniya sevikkiniya vaaikkiniya

vandhtha iruvinaikku maamarundhthu – mundhthiya

nannaeri naamariya naappulamai valluvanaar

panniya inkuralvaen paa


விளக்கம்

(பொ-ரை.) நாம் நல்லொழுக்க வழியை அறிதற்பொருட்டுப் புலமை மிக்க திருவள்ளுவர் இயற்றிய இனிய குறள்வெண்பாக்கள் ஆராய்ந்தால் மனத்திற்கும் கேட்டாற் செவிக்கும் ஓதினால் நாவிற்கும் இன்பந்தருவன; தொன்றுதொட்டு வரும் இருவினைகளாகிய நோய்கட்குச் சிறந்த மருந்தாவன. Tamilvu


Freehand Translation*

Sweet for the mind, ears and mouth;

an antidote for accumulated twin karmas - To give us

the prime way of life; came the brilliant Valluvanaar’s

work of sweet kural couplets.

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kavuniyanaar, yet!

The short distichs which the learned poet Valluvar has composed in order that we may know the ancient right way, are sweet to the mind to meditate on; sweet to the ear to hear; and sweet to the mouth to repeat; and they moreover form a sovereign medicine to promote good and prevent evil actions. Edward Jewitt Robinson