திருவள்ளுவமாலை - களத்தூர்க் கிழார் - 44

    ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
    
    தரும முதனான்குஞ் சாலு - மருமறைக

    ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்

    புந்தி மொழிந்த பொருள்.


Thiruvalluva Maalai - Kalathoor Kilar - 44

oruvar irukuralae muppaalin oathum

tharmam muthalnaankum saalum – arumaraikal

aindhthum chamayanool aarumnam valluvanaar

pundhthi molindhtha porul


விளக்கம்

(பொ-ரை.) இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.Tamilvu


Freehand Translation*

Sufficient for One is the Couplets of Three chapters

spanning ‘the Four’ inclusive of virtue - the Vedas

Five and religious treaties Six, constituted by Valluvans

brilliantly conveyed essence.

* note: this personal translation will do no justice to the original thiruvalluva maalai work from Kalathoor Kilar, yet!

He who studies the two-lined verses in the three divisions of Valluvar’s Cural, will obtain the four things (virtue, wealth, pleasure, and eternal happiness); for they contain the substance of the five Vēdas (including the Mahābhārat), and the six systems of the six sects. Edward Jewitt Robinson