Madurai Perumarudhanar
திருவள்ளுவமாலை - மதுரைப் பெருமருதனார் - 37
அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றெளிய - முறைமையால்
வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனா
ரோதவழுக் கற்ற துலகு.
Thiruvalluva Maalai - Madurai Perumarudhanar - 37
arammuppath thetdu porulyelupathu inpath
thiramirupath thaindhthaal theliya – muraimaiyaal
vaethavilup porulai vaenkuralaal valluvanaar
oathaalak katrrathu ulaku
விளக்கம்
(பொ–ரை.) திருவள்ளுவர், அறத்தை முப்பத்தெட் டதிகாரங்களாகவும் பொருளை எழுபததிகாரங்களாகவும் இன்பத்தை இருபத்தைந் ததிகாரங்களாகவும் வகுத்து, வேதப் பொருளைக் குறள் வெண்பாவாற் கோவைபடக் கூறியதால், உலகம் தீயொழுக்கத்தினின்றும் தீர்ந்தது. Tamilvu
Freehand Translation*
Virtue thirty eight, Wealth seventy,
Love twenty five; so comprising - simple and
housing the essence of Vedas, as Valluvan gave
the couplets, world was purified.
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Perumarudhanar, yet!