திருவள்ளுவமாலை - கவிசாகரப் பெருந்தேவனார் - 36

    பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புனத

    மாவிற் கருமுனியா யானைக்- கமரரும்பல்

    தேவிற் றிருமா லெனச்சிறந்த தென்பவே

    பாவிற்கு வள்ளுவர்வெண் பா.


Thiruvalluva Maalai - Kavisagara Perundevanar - 36

poovitrkuth thaamaraiyae ponnukkuch saampunatham

aavitrku arumuniyaa aanaikku akarumpal

thaevil thirumaal yenachirandhtha thenpavae

paavitrku valluvarvaen paa


விளக்கம்

(பொ–ரை.) பூவிற்குத் தாமரையும், பொன்னிற்கு நாவற் சாறமும், ஆவிற்குக் காமதேனுவும் யானைக்கு ஐராவதமும், தேவிற்குத் திருமாலும், நூலிற்குத் திருக்குறளும் சிறந்தனவாம். Tamilvu


Freehand Translation*

Lotus among the flowers, Gold among the valuables,

Kamadenu among the cows - among elephants Airavatham,

among gods Thirumaal, so are the best said to be;

likewise among poems it’s Valluvar’s couplets.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kavisagara Perundevanar, yet!

Kamadenu has been referred to as the one owned by Karumuni or Vasishtar and not explicably referenced.

Gold is approximated equivalent of Saamputhanam: A kind of fine gold, one of four kinds of poṉ,