திருவள்ளுவமாலை - மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார் - 35

    இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு

    மன்பதைக் கெல்லா மனமகிழ- வன்பொழியா

    துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்

    வள்ளுவர் வாயுறை வாழ்த்து.


Thiruvalluva Maalai - Madurai Aruvai Vanigan Ilavettanar - 35

inpamum thunpamum yennum ivaiirandum

manpathaikku yellaam manammakila – anpoliyaathu

ulli unara uraiththaarae oathuseer

valluvar vaayurai vaalththu


விளக்கம்

(பொ–ரை.) மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார்.

வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து. Tamilvu


Freehand Translation*

Happines and sadness, the both

for all the masses’s good - lovingly,

to know and realize gave he, the famous

Valluvar; the work resolute.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Aruvai Vanigan Ilavettanar, yet!