திருவள்ளுவமாலை - மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார் - 34

    புலவர் திருவருள் ளுவரன்றிப் பூமேற்

    சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு

    பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்

    கறங்கிருண்மா லைக்கும் பெயர்.


Thiruvalluva Maalai - Madurai Tamilaasiriyar Sengunrur Kilar - 34

pulavar thiruvalluvar anrip poomael

silavar pulavar yenachseppal – nilavu

pirangkuoli maamalaikkum paeyarmaalai matrrum

karangkuirul maalaikkum paeyar


விளக்கம்

(பொ–ரை.) திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும். Tamilvu


Freehand Translation*

Regarding ‘others’ and Thiruvalluvar too

as poets of same calibre - is alike saying

moonlit evenings and pitch dark evenings

are the same.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Madurai Tamilaasiriyar Sengunrur Kilar, yet!

To call anyone a poet upon this earth besides the divine Valluvar, would be like calling both the evening illumined by the moon, and the evening shrouded in darkness, a fine evening. Edward Jewitt Robinson