Uruthira SanmaKannar
திருவள்ளுவமாலை - உருத்திர சன்மகண்ணர் - 31
மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு.
Thiruvalluva Maalai - Uruthira SanmaKannar - 31
manatrkilaikka neeroorum maindhtharkal vaaivaiththu
unachsurakkum thaaimulai onpaal – pinakkuilaa
vaaimoli valluvar muppaalmathip pulavorkku
aaithorum oorum arivu
விளக்கம்
(பொ–ரை.) நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும். Tamilvu
Freehand Translation*
On digging sand, water springs; children on sucking
mother’s nipple get - Best milk - Authentic
great saying’s of Muppal, for the wise
on contemplating, springs wisdom
* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Uruthira SanmaKannar, yet!
Water springs forth when the earth is dug, and milk when the child sucks the mother’s breast, but knowledge when the poets study Valluvar’s Cural. Edward Jewitt Robinson