திருவள்ளுவமாலை - பாரதம் பாடிய பெருந்தேவனார் - 30

    எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்

    செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்

    பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை

    நேர்வனமற் றில்லை நிகர்.


Thiruvalluva Maalai - Baratham Paadiya Perundevanar - 30

yepporulum yaarum iyalpin arivurach

seppiya valluvarthaam seppavarum – muppaatrkup

paarathanj seeraama kathaimanup pantaimarai

naervanamatr rillai nikar


விளக்கம்

(பொ–ரை.) எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம். Tamilvu


Freehand Translation*

Anything anyone wishing to know comprehensively

is fulfilled by Valluvan’s work of words - The Muppal;

Bharatham, SriRam’s story, Manu’s work, Old Vedas

alike; remains unparalleled

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Baratham Paadiya Perundevanar, yet!