திருவள்ளுவமாலை - போக்கியார் - 26

    அரசிய லையைந் தமைச்சிய லீரைந்

    துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்

    திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்

    றெண்பொரு ளேழா மிவை.


Thiruvalluva Maalai - Pokkiyaar - 26

arasiyal aiyaindhthu amaichiyal eeraindhthu

uruval aranirandu onruonkool – iruviyal

thinpatai natpup pathinaelkuti pathinmoonru

yenporul yaelaam ivai


விளக்கம்

(பொ–ரை.) திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம். Tamilvu


Freehand Translation*

Royalty five times five; Ministry two times five;

model Fort two; Possession One - two on

strong Army; Friendship seventeen; Nobility thirteen

So are the seven divisions of Wealth

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Pokkiyaar, yet!