திருவள்ளுவமாலை - எறிச்சலூர் மலாடனார் - 25

    பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே

    தூய துறவறம்ஒன் றுஊழாக – ஆய

    அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்

    திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து


Thiruvalluva Maalai - Ericchalur Malaadanar - 25

paayiram naankuil laramirupaan panmoonrae

thooya thuravaramon ruoolaaka – aaya

araththuppaal naalvakaiyaa aaindhthuraiththaar noolin

thiraththuppaal valluvanaar thaerndhthu


விளக்கம்

(பொ–ரை.) திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார். Tamilvu


Freehand Translation*

Paayiram four; good Illaram twenty; thirteen

Pure Thuravaram; one Ool - So

Arathupaal comprising four divisions gave he

The Valluvan, after examining deep.

Paayiram = Introduction

Illaram = Householder’s virtue

Thuravaram = Ascetic’s virtue

Arathupaal - On virtue

The numbers correspond to the number of athigaarams or sets of ten couplets.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Ericchalur Malaadanar, yet!