திருவள்ளுவமாலை - மாங்குடி மருதனார் - 24

    ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி

    வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ

    ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே

    வள்ளுவர் வாய்மொழி மாண்பு.


Thiruvalluva Maalai - Mangudi Marudhanar - 24

oathatrku yelithaai unarthatrku arithaaki

vaethap porulaai mikavilangkith – theethatrnor

ulluthoru ulluthoru ullam urukkumae

valluvar vaaimoli maanpu


விளக்கம்

(பொ–ரை.) திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும். Tamilvu


Freehand Translation*

Easy to chant, not so to realize

Veda alike’t remains - as the non evil

ones contemplate, their minds melt at

Valluvan word’s greatness

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Mangudi Marudhanar, yet!


The beauty of Valluvar’s Cural is, that it not only illustrates the abstruse doctrines of the Vēdas, but is itself a Vēda, easy to be studied, and having the effect of melting the hearts of the righteous who study it. Edward Jewitt Robinson