திருவள்ளுவமாலை - தொடித்தலை விழுத்தண்டினார் - 22

    அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்

    திறம்மூன்று எனப்பகுதி செய்து – பெறல்அறிய

    நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்

    போலும் ஒழிந்த பொருள்


Thiruvalluva Maalai - Thoditthalai Viluthandinar - 22

aramnaanku ariporul yaelonru kaamath

thirammoonru yenappakuthi seithu – paeralariya

naalum molindhthapaeru naavalarae nankunarvaar

polum olindhtha porul


விளக்கம்

(பொ–ரை.) அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்!

நாடு அரணுள் அடக்கப்பட்டது.


Freehand Translation*

Virtue four, Wealth seven, Love

three; so was bisected - rare to obtain

‘Four’ he told, the Perunaavalar

who knows the absolute.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Thoditthalai Viluthandinar, yet!

perunaavalar = great poet

The great poet’s work comprises everything; or, if there be anything which it does not comprise, he alone knows it. Edward Jewitt Robinson