திருவள்ளுவமாலை - கோதமனார் - 15

  ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்

  போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் – ஏட்டெழுதி

  வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்

  சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று


Thiruvalluva Maalai - Kodhamanar - 15

aatrral aliyumenru andhthanarkal naanmaraiyaip

potrri yuraiththuyaettin puraththeluthaar – yaettaeluthi

vallunarum vallaarum valluvanaar muppaalaich

sollitinum aatrralchor vinru


கோதமனார் - விளக்கம்

(பொ–ரை.) பிராமணர் நால்வேதங்களையும் ஏட்டில் எழுதினால் அவற்றின் வலிமை கெடுமென்று வாய்ப் பாடமாகவே சொல்லிக் காத்துவருவர்; திருவள்ளுவரின் திருக்குறளையோ ஏட்டிலெழுதினாலும் எவர் படித்தாலும் அதன் வலிமை குறைவதில்லை.

பிராமணர் ஆரிய வேதங்களை ஏட்டிலெழுதாதிருந்தமைக்குக் கரணியங்கள்–

 1. ஏட்டிலெழுதினால் அவற்றின் வெள்ளைக் கோட்டியும் பிள்ளைக் கருத்தும் வெளியாகிவிடுமென்னும் அச்சம்.

 2. ஏட்டிலெழுதினால் எல்லாருங் கற்றுப் பூசாரித்தொழிலை மேற்கொண்டு பிராமணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விடுவாரென்னும் அச்சம்.

 3. ஏட்டிலெழுதாதிருந்தால் மேன்மேலுங் காலத்திற்கேற்ற திருந்திய கருத்துக்களைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்புண்மை.


Freehand Translation*

Because the intensity will be lost, Anthanar

Never wrote That they praised - Was written

to greatest and laymen equal, the Valluvan’s Muppal

Though recited incessantly, intensity never lost

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Kodhamanar, yet!

Anthanar may roughly be translated as - the learned, especially the Brahmins

The Brahmans preserve the four Vēdas orally, and never commit them to writing, because if read by all they would be less valued; but the Cural of Valluvar, though committed to writing and read by all, would nevertheless not lose its value. Edward Jewitt Robinson