திருவள்ளுவமாலை - அரிசில்கிழார் - 13

பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு

தெரிந்து திறந்தொறும் சேரச் – சுருங்கிய

சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்

வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்


Thiruvalluva Maalai - Arisil Kilar - 13

parandhtha porul yellaam paarariya vaeru

therindhthu thirandhthorum saerach – surungkiya

sollaal viriththup porulvilangkach solluthal

vallaaraar valluvaral laal


அரிசில்கிழார் - விளக்கம்

(பொ–ரை.) விரிவுபட்டுக் கிடக்கும் வெவ்வேறு பொருள்களையெல்லாம் ஒழுங்காகக் கூறுபடுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் வள்ளுவரன்றி வேறு யார்?


Freehand Translation*

Broadened sujects brought into world’s light

taxonomized and categorized - Condensed

words holding deepest meanings, spoke he,

Valluvar, valiant than any other.

* note: this translation will do no justice to the original thiruvalluva maalai work from Arisil Kilar, yet!

Who but Valluvar is able to separate, according to their order, all the things blended together in the Vēdas, and impart them to the world in a condensed form and with due amplification? Edward Jewitt Robinson


More from Wikisource

    தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
    வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
    அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
    முப்பால் மொழிமூழ்கு வார் (12)

கருத்துரை: நாளம் எனப்படும் தண்டோடு பொருந்திய தாமரைமலர்களை உடைய பொய்கையில்/ குளத்தில் மூழ்கி நீராடுவார் வேறு தண்ணீரை விரும்பாது போதல் வியப்பன்று/ஆச்சரியமன்று. அதுபோல வள்ளுவனாரின் முப்பால் எனும் திருக்குறள் நூலில் தோய்ந்தவர்/ மூழ்கியவர் அதற்கு அப்பால் வேறொரு பாவினை/ பாட்டை விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள். இதுவே உண்மையில் வியப்பைத்தருவதாம்.