குறள் 968

மானம்

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து

marundhthomatrru oonoampum vaalkkai paerundhthakaimai
peedaliya vandhtha idaththu


Shuddhananda Bharati

Honour

Is nursing body nectar sweet
Even when one's honour is lost?


GU Pope

Honour

When high estate has lost its pride of honour meet,
Is life, that nurses this poor flesh, as nectar sweet?

For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.


Mu. Varadarajan

ஒருவனுடைய பெருந்தகைமை தன்‌ சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன்‌ உடம்பை மட்டும்‌ காத்து வாழும்‌ வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?


Parimelalagar

பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ?
விளக்கம்:
('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப் பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப் பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊண்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)


Manakkudavar

(இதன் பொருள்). தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்து, சாவாதே இருந்து உயிரினையோம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ ,
(என்றவாறு). பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.