குறள் 967

மானம்

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

ottaarpin senroruvan vaalthalin andhnilaiyae
kettaan yenappaduthal nanru


Shuddhananda Bharati

Honour

Better it is to die forlorn
Than live as slaves of those who scorn.


GU Pope

Honour

Better 'twere said, 'He's perished! than to gain
The means to live, following in foeman's train.

It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.


Mu. Varadarajan

மதியாதவரின்‌ பின்சென்று ஒருவன்‌ உயிர்‌ வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில்‌ நின்று அழிந்தான்‌ என்று சொல்லப்படுதல்‌ நல்லது


Parimelalagar

ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் - தன்னை இகழ்வார் பின்னே சென்று பொருள் பெற்று அதனால் ஒருவன் உயிர் வாழ்தலின்; அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று . அது செய்யாது இறந்தான் என்று சொல்லப்படுதல் அவனுக்கு நன்று.
விளக்கம்:
(ஒட்டுதல் - பொருந்துதல். 'அந்நிலையே' என்றது, செல்லாத முன்னை நிலைக்கண்ணே நின்று என்றவாறு; அப்பொழுதே என்றும் ஆம். 'புகழும் புத்தேள் நாடும் பயவாதேனும் பொருள் பெற்று உயிர் வாழ்வாம்' என்பாரை நோக்கிக் கூறியது.)


Manakkudavar

(இ-ள்.) ஒருவன் தன்னை இகழ்வார்பின் சென்று வாழும் வாழ்க்கையின், அவர்பால் செல்லாத அந்நிலையே நின்று கெட்டானென்று பிறரால் சொல்லப்படு தல் நன்று ,
(என்றவாறு).