Kural 966
குறள் 966
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை
pukalinraal puththaelnaatdu uiyaathaal yenmatrru
ikalvaarpin senru nilai
Shuddhananda Bharati
Why fawn on men that scorn you here
It yields no fame, heaven's bliss neither.
GU Pope
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?
Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.
Mu. Varadarajan
மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?
Parimelalagar
இகழ்வார்பின் சென்று நிலை - மனத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது?
விளக்கம்:
(புகழ் பயப்பதனை 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்ற என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற்கு குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) இம்பைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை; ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி?
(என்றவாறு). இது தாரை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.