குறள் 965

மானம்

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

kunrin anaiyaarum kunruvar kunruva
kunri anaiya seyin


Shuddhananda Bharati

Honour

Even hill-like men will sink to nought
With abrus-grain-like small default.


GU Pope

Honour

If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.

Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.


Mu. Varadarajan

மலைபோல்‌ உயர்ந்த நிலையில்‌ உள்ளவரும்‌, தாழ்வுக்குக்‌ காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும்‌ தாழ்ந்து போய்விடுவர்‌.


Parimelalagar

குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
விளக்கம்:
('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)


Manakkudavar

(இதன் பொருள்) மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபாடு வர்; ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின், (எ-று). இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.