குறள் 963

மானம்

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

paerukkaththu vaendum panithachiiriya surukkaththu
surukkaththu vaendum uyarvu


Shuddhananda Bharati

Honour

Be humble in prosperity
In decline uphold dignity.


GU Pope

Honour

Bow down thy soul, with increase blest, in happy hour;
Lift up thy heart, when stript of all by fortune's power.

In great prosperity humility is becoming; dignity, in great adversity.


Mu. Varadarajan

செல்வம்‌ பெருகியுள்ள காலத்தில்‌ ஒருவனுக்குப்‌ பணிவு வேண்டும்‌. செல்வம்‌ குறைந்து சுருங்கும்‌ வறுமையுள்ள காலத்தில்‌ பணியாத உயர்வு வேண்டும்‌.


Parimelalagar


விளக்கம்:
(பணியாமை தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற்காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமை சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்; செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்,
(என்றவாறு)