குறள் 962

மானம்

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

seerinum seeralla seiyaarae seerodu
paeraanmai vaendu pavar


Shuddhananda Bharati

Honour

Who seek honour and manly fame
Don't do mean deeds even for name.


GU Pope

Honour

Who seek with glory to combine honour's untarnished fame,
Do no inglorious deeds, though men accord them glory's name.

Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake


Mu. Varadarajan

புகழோடு பெரிய ஆண்மையும்‌ விரும்புகின்றவர்‌, புகழ்‌ தேடும்‌ வழியிலும்‌ குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச்‌ செய்யமாட்டார்‌.


Parimelalagar

சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார்.
விளக்கம்:
(எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும், நிகரல்லாதன செய் யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்,
(என்றவாறு). 3