Kural 959
குறள் 959
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
nilaththil kidandhthamai kaalkaatdum kaatdum
kulaththil pirandhthaarvaaich sol
Shuddhananda Bharati
Soil's nature is seen in sprout
The worth of birth from words flow out.
GU Pope
Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one'sbirth).
Mu. Varadarajan
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.
Parimelalagar
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச்சொல் காட்டும் - அது போலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும்.
விளக்கம்:
(கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)
Manakkudavar
(இதன் பொருள்) வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும், அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும்; அதுபோல், உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும், (எ - று.)