Kural 958
குறள் 958
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
nalaththinkan naarinmai thonrin avanaik
kulaththinkan aiyap padum
Shuddhananda Bharati
If manners of the good are rude
People deem their pedigree crude.
GU Pope
If lack of love appear in those who bear some goodly name,
‘Twill make men doubt the ancestry they claim.
Tf one of a good family betrays want of affection, his descent from it will be called in question.
Mu. Varadarajan
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
Parimelalagar
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் - குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்; அவனைக் குலத்தின்கண் ஐயப்படும் - அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்.
விளக்கம்:
(நலமும் குலமும், ஆகுபெயர். நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமா யின், அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக,
(என்றவாறு).