குறள் 957

குடிமை

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து

kutippirandhthaar kanvilangkum kutrram visumpin
mathikkan maruppol uyarndhthu


Shuddhananda Bharati

Nobility

The faults of nobly-born are seen
Like on the sky the spots of moon.


GU Pope

Nobility

The faults of men of noble race are seen by every eye,
As spots on her bright orb that walks sublime the evening sky.

The defects of the noble will be observed as clearly as the dark spots in the moon.


Mu. Varadarajan

உயர்குடியில்‌ பிறந்தவரிடத்தில்‌ உண்டாகும்‌ குற்றம்‌, ஆகாயத்தில்‌ திங்களிடம்‌ காணப்படும்‌ களங்கம்போல்‌ பலரறியத்‌ தோன்றும்‌.


Parimelalagar

குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின் கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும.
விளக்கம்:
(உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால்மாறு பட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) உயர்குடிப் பிறந்தார் மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத் தின் மதியின் கணுள்ள மறுப்போல் உயர்ந்து விளங்கும்; ஆதலால், குற்றப்பட ஒழுகற்க,
(என்றவாறு). இது குற்றஞ் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.