குறள் 954

குடிமை

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

adukkiya koati paerinum kutippirandhthaar
kunruva seithal ilar


Shuddhananda Bharati

Nobility

Even for crores, the noble mood
Cannot bend to degrading deed.


GU Pope

Nobility

Millions on millions piled would never win
The men of noble race to soul-degrading sin.

Though blessed with immense wealth, the noble will never do anything unbecoming.


Mu. Varadarajan

பலகோடிப்‌ பொருளைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌ உயர்குடியில்‌ பிறந்தவர்‌ தம்‌ குடியின்‌ சிறப்புக்‌ குன்றுவதற்குக்‌ காரணமான குற்றங்களைச்‌ செய்வதில்லை.


Parimelalagar

அடுக்கிய கோடி பெறினும் - பலவாக அடுக்கிய கோடி அளவிற்றாய பொருளைப் பெற்றாராயினும்; குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் தம் ஒழுக்கம் குன்றும் தொழில்களைச் செய்யார்.
விளக்கம்:
('அடுக்கிய கோடி' என்பது, ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. குன்றும் தொழில்கள் - குன்றுதற்கு ஏதுவாய தொழில்கள்.)


Manakkudavar

(இதன் பொருள்) பல கோடிப் பொருளைப் பெறினும், உயர்குடிப்பிறந்தார் தங் குடிக்குத் தாழ்வாயின் செய்யார்,
(என்றவாறு). இது சான்றாண்மை விடாரென்றது.