குறள் 952

குடிமை

ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

olukkamum vaaimaiyum naanumim moonrum
ilukkaar kutippirandh thaar


Shuddhananda Bharati

Nobility

The noble-born lack not these three:
Good conduct, truth and modesty.


GU Pope

Nobility

In these three things the men of noble birth fail not:
In virtuous deed and truthful word, and chastened thought.

The high-born will never deviate from these three; good manners, truthfulness and modesty.


Mu. Varadarajan

உயர்குடியில்‌ பிறந்தவர்‌ ஒழுக்கமும்‌ வாய்மையும்‌ நாணமும்‌ ஆகிய இம்‌ மூன்றிலிருந்தும்‌ வழுவாமல்‌ இயல்பாகவே நன்னெறியில்‌ வாழ்வர்‌.


Parimelalagar

குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்.
விளக்கம்:
(ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின், 'இழுக்கார்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒழுக்க முடைமையும், மெய்ம்மை கூறுதலும், அற்றம் மறைத்த லாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.