Kural 951
குறள் 951
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
itrpirandhthaar kanallathu illai iyalpaakach
seppamum naanum orungku
Shuddhananda Bharati
Right-sense and bashfulness adorn
By nature only the noble-born.
GU Pope
Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
Mu. Varadarajan
நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
Parimelalagar
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இப்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா.
விளக்கம்:
('இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல. செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம்; பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.
Manakkudavar
குடியியலாவது அரசரும், அமைச்சரும், வீரருமல்லாத மக்கள் தமது இயல்பு கூறுதல். கூறிய அம்மூன்றினும் முற்படக் குடிப்பிறந்தார் இலக்கணங் கூறுவர். (இதன் பொருள்) உயர்குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு நடுவுநிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா,
(என்றவாறு). இஃது இற்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.