குறள் 950

மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து

utrravan theerppaan marundhthulaich selvaanaenru
appaalnaatr kootrrae marundhthu


Shuddhananda Bharati

Medicine

Patient, doctor, medicine and nurse
Are four-fold codes of treating course.


GU Pope

Medicine

For patient, leech, and remedies, and him who waits by patient's side,
The art of medicine must fourfold code of laws provide.

Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.


Mu. Varadarajan

நோயுற்றவன்‌, நோய்‌ தீர்க்கும்‌ மருத்துவன்‌, மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன்‌ என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப்‌ பாகுபாடு உடையது.


Parimelalagar

மருந்து-பிணிக்கு மருந்தாவது; உற்றவன் - அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து-அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது.
விளக்கம்:
(நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார். 'நான்குகூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன்வகை நான்காவன. பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் எற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதுல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவை யெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின், இத்தொகுதியையும் 'மருந்து' என்றார்; ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும் என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) நோயுற்றவனும், நோய் தீர்க்கு மவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத் த்து மருந்து,
(என்றவாறு)