குறள் 949

மருந்து

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

utrraan alavum piniyalavum kaalamum
katrraan karuthich seyal


Shuddhananda Bharati

Medicine

Let the skilful doctor note
The sickmen, sickness, season and treat.


GU Pope

Medicine

The habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill.

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).


Mu. Varadarajan

மருத்துவ நூலைக்‌ கற்றவன்‌, நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும்‌, நோயின்‌ அளவையும்‌, காலத்தையும்‌ ஆராய்ந்து செய்யவேண்டும்‌.


Parimelalagar

கற்றான்-ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல்- அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன் செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க.
விளக்கம்:
(ஆதுரன் அளவு-பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு-சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம்-மேற் சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்த செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நோயுற்றவனது அளவும், நோயினது அளவும், அது பற்றிய காலமும் அறிந்து, அதற்குத் தக்கவாறு மருந்து செய்க; ஆயுள் வேதம் வல்லவன்.