குறள் 920

வரைவின்மகளிர்

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

irumanap paentirum kallum kavarum
thiruneekkap pattaar thodarpu


Shuddhananda Bharati

Wanton women

Double-minded whores, wine and dice
Are lures of those whom fortune flies.


GU Pope

Wanton Women

Women of double minds, strong drink, and dice; to these giv'n o'er,
Are those on whom the light of Fortune shines no more.

Treacherous women, liquor, and gambling are the associates of such as have forsaken by Fortune.


Mu. Varadarajan

இருவகைப்பட்ட மனம்‌ உடைய பொதுமகளிரும்‌ கள்ளும்‌ சூதுமாகிய இம்‌ மூவகையும்‌ திருமகளால்‌ நீக்கப்பட்டவரின்‌ உறவாகும்‌.


Parimelalagar

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு.
விளக்கம்:
(இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைப்பற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கிப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கவர்த்தமனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும், திரு மகளால் கடியப்பட்டாரது நட்பு,
(என்றவாறு) இது நல்குரவாவார் சார்வரென்றது.