Kural 921
குறள் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
utkap pataaar oliyilappar yenjgnyaanrum
katkaathal kondoluku vaar
Shuddhananda Bharati
Foes fear not who for toddy craze
The addicts daily their glory lose.
GU Pope
Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
Mu. Varadarajan
கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவார்.
Parimelalagar
கள் காதல் கொண்டு ஒழுகுவார்-கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர்.
விளக்கம்:
(அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார்; தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.)
Manakkudavar
கள்ளுண்ணாமையாவது கள்ளுண்டலைத் தவிர வேண்டு மென்று கூறுதல். இது கணிகையர் கூட்டத்தினால் வருதலின், அதன் பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல் கொண்டு ஒழுகுவார்,
(என்றவாறு) இது மதிக்கவும் படார், புகழும் இலராவரென்றது.