Kural 922
குறள் 922
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
unnatrka kallai unilunka saannoraan
yennap padavaentaa thaar
Shuddhananda Bharati
Drink not liquor; but let them drink
Whom with esteem the wise won't think.
GU Pope
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.
Let no liquor be drunk; if it is desired, let it be drunk by those who care not for esteem of the great.
Mu. Varadarajan
கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.
Parimelalagar
கள்ளை உண்ணற்க-அறிவுடையராயினார் அஃதிலராதற்கு ஏதுவாய கள்ளினை உண்ணாதொழிக; உணில் சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்-அன்றியே உண்ணல் வேண்டுவார் உளராயின், நல்லோரால் எண்ணப்படுதலை வேண்டாதார் உண்.
விளக்கம்:
(பெறுதற்கரிய அறிவைப் பெற்று வைத்தும் கள்ளான் அழித்துக் கொள்வாரை, இயல்பாகவே அஃது இல்லாத விலங்குகளுடனும் எண்ணாராகலின் 'சான்றோரான் எண்ணப்பட வேண்டாதார் உண்க' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) கள்ளினை உண்ணாதொழிக; உண்ண வேண்டின், சான்றோரால் மதிக்கப்படுதலை வேண்டாதார் உண்க,
(என்றவாறு).