குறள் 923

கள்ளுண்ணாமை

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி

eenraal mukaththaeyum innaathaal yenmatrruch
saannor mukaththuk kali


Shuddhananda Bharati

Not drinking liquor

The drunkard's joy pains ev'n mother's face
How vile must it look for the wise?


GU Pope

Not Drinking Palm-Wine

The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?

Intoxication is painful even in the presence of (one's) mother; what will it not then be in that of the wise ?


Mu. Varadarajan

பெற்ற தாயின்‌ முகத்திலும்‌ கள்ளுண்டு மயங்குதல்‌ துன்பம்‌ தருவதாகும்‌; குற்றம்‌ கடியும்‌ இயல்புடைய சான்றோரின்‌ முகத்தில்‌ அது என்னவாகும்‌?


Parimelalagar

ஈன்றாள் முகத்தேயும் களி இன்னாது-யாது செய்யினும் உவக்கும் தாய் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னாதாம்; மற்றச் சான்றோர் முகத்து என்? -ஆனபின், குற்றம் யாதும் பொறாத சான்றோர் முன்பு களித்தல் அவர்க்கு யாதாம்?
விளக்கம்:
(மனம் மொழி மெய்கள் தம் வயத்த அன்மையான், நாண் அழியும்;அழியவே, ஈன்றாட்கும் இன்னாதாயிற்று; ஆனபின், கள் இருமையும் கெடுத்தல் அறிந்து சேய்மைக்கண்ணே கடியும் சான்றோர்க்கு இன்னாதாதல் சொல்ல வேண்டுமோ? என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னைப்பயந்தாள் முன்பாயினும் கள்ளுண்டு களித்தல் இன்னா தாம்; அங்ஙனமாக, சான்றோர் முன்பு களித்தல் மற்றியாதாகும்?
(என்றவாறு) எல்லார் முன்பும் இன்னாமையே பயப்பதென் றவா றாயிற்று.