குறள் 918

வரைவின்மகளிர்

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

aayum arivinar allaarkku anangkenpa
maaya makalir muyakku


Shuddhananda Bharati

Wanton women

Senseless fools are lured away
By arms of sirens who lead astray.


GU Pope

Wanton Women

As demoness who lures to ruin woman's treacherous love
To men devoid of wisdom's searching power will prove.

The wise say that to such as are destitute of discerning sense the embraces of faithless women are(as ruinous as those of) the celestail female.


Mu. Varadarajan

வஞ்சம்‌ நிறைந்த பொதுமகளிரின்‌ சேர்க்கை, ஆராய்ந்தறியும்‌ அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்‌.


Parimelalagar

மாய மகளிர் முயக்கு - உருவு சொற்செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்:
(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்கு - தீண்டல். இவ்வுருவகத்தான், அம்முயக்கம் முன் இனிது போன்று பின் உயிர்கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவு என்பது தோன்ற அவர் மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)


Manakkudavar

(இதன் பொருள்) யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடை யரல்லாதார்க்கு , வருத்தமாமென்று சொல்லுவர் , மாயத்தைவல்லமகளிரது முயக் கத்தை , (எ - று ) இஃது இவரை அறிவில்லாதார் சேர்வமென்றது.