குறள் 917

வரைவின்மகளிர்

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்

nirainaenjcham illavar thoivaar piranaechitr
paenip punarpavar thol


Shuddhananda Bharati

Wanton women

Hollow hearts alone desire
The arms of whores with hearts elsewere.


GU Pope

Wanton Women

Who cherish alien thoughts while folding in their feigned embrace,
These none approach save those devoid of virtue's grace.

Those who are destitute of a perfectly (reformed) mind will covet the shoulders of those whoembrace (them) while their hearts covet other things.


Mu. Varadarajan

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும்‌ ஆற்றல்‌ இல்லாதவர்‌, தம்‌ நெஞ்சில்‌ வேறுபொருளை விரும்பிக்‌ கூடும்‌ பொது மகளிரின்‌ தோளைப்‌ பொருந்துவர்‌.


Parimelalagar

நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினார் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்.
விளக்கம்:
(பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார் தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) நிறையுடைய நெஞ்சில்லாதவர் தோய்வர் ; இன்பமல்லாத பிற வாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார்போலப் புணரும்வ ரது தோளினை,
(என்றவாறு). இது நிறையில்லாதார் சேர்வரென்றது.