குறள் 915

வரைவின்மகளிர்

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்

pothunalaththaar punnalam thoyaar mathinalaththin
maanda arivi navar


Shuddhananda Bharati

Wanton women

The lofty wise will never covet
The open charms of a vile harlot.


GU Pope

Wanton Women

From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.

Those whose knowledge is made excellent by their (natural) sense will not covet the trffling delightsof those whose favours are common (to all).


Mu. Varadarajan

இயற்கை யறிவின்‌ நன்மையால்‌ சிறப்புற்ற அறிவுடையோர்‌, பொருள்‌ தருவார்‌ எல்லார்க்கும்‌ பொதுவாக இன்பம்‌ தரும்‌ மகளிரின்‌ புன்மையான நலத்தைப்‌ பொருந்தார்‌.


Parimelalagar

மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதி நன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல் நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.
விளக்கம்:
(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்து புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார் , எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்,
(என்றவாறு). இது புத்திமான் சேரானென்றது.