குறள் 914

வரைவின்மகளிர்

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்

porutporulaar punnalandh thoyaar arutporul
aayum arivi navar


Shuddhananda Bharati

Wanton women

The wise who seek the wealth of grace
Look not for harlots' low embrace.


GU Pope

Wanton Women

Their worthless charms, whose only weal is wealth of gain,
From touch of these the wise, who seek the wealth of grace, abstain.

The wise who seek the wealth of grace will not desire the base favours of those who regard wealth(and not pleasure) as (their) riches.


Mu. Varadarajan

பொருள்‌ ஒன்றையே பொருளாகக்‌ கொண்ட பொது மகளிரின்‌ புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும்‌ அறிவுடையோர்‌ பொருந்தமாட்டார்‌.


Parimelalagar

பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார்.
விளக்கம்:
(அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளைப் பொருளாகக் கொள்வாரது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்,
(என்றவாறு).