குறள் 913

வரைவின்மகளிர்

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று

porutpaentir poimmai muyakkam irutdaraiyil
yaethil pinandhthaleei atrru


Shuddhananda Bharati

Wanton women

The false embrace of whores is like
That of a damned corpse in the dark.


GU Pope

Wanton Women

As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms!

The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse inadark room.


Mu. Varadarajan

பொருளையே விரும்பும்‌ பொதுமகளிரின்‌ பொய்யான தழுவுதல்‌, இருட்டறையில்‌, தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத்‌ தழுவினாற்‌ போன்றது.


Parimelalagar

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் - கொடுப்பாரை விரும்பாது பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்ம்மையையுடைய முயக்கம்; இருட்டு அறையில் ஏதில் பிணம் தழீஇயற்று - பிணமெடுப்பார் இருட்டறைக்கண்ணே முன்னறியாத பிணத்தைத் தழுவினாற் போலும்.
விளக்கம்:
(பொருட்கு முயங்கும் மகளிர், கருத்தும் செயலும் ஆராயாது சாதியும் பருவமும் ஒவ்வாதானை முயங்குங்கால், அவர் குறிப்புக் கூலிக்குப் பிணம் எடுப்பார் காணப்படாத ஓரிடத்தின்கண் இயைபில்லாததோர் பிணத்தை எடுக்குங்கால், அவர் குறிப்போடு ஒக்கும். எனவே, அகத்தால் அருவராநின்றும் பொருள் நோக்கிப் புறத்தால் தழுவுவர்; அதனை ஒழிக என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவர் சொல்லும் செயலும் பொய் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளே கருதும் பெண்டிர் ஒருவனோடு பொய்யே முயங் கும் முயக்கம், இருட்டறையினுள்ளே கிடந்ததொரு வேற்றுமைப் பிணத்தைக் கூலிக்குத் தழுவியது போலும்,
(என்றவாறு) இவை இரண்டினாலும் கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் கூறப்பட்டது