குறள் 912

வரைவின்மகளிர்

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

payanthookkip panpuraikkum panpin makalir
nayanthookki nallaa vidal


Shuddhananda Bharati

Wanton women

Avoid ill-natured whores who feign
Love only for their selfish gain.


GU Pope

Wanton Women

Who weigh the gain, and utter virtuous words with vicious heart,
Weighing such women's worth, from their society depart.

One must ascertain the character of the ill-natured women who after ascertaining the wealth (of aman) speak (as if they were) good natured-ones, and avoid intercourse (with them).


Mu. Varadarajan

கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல்‌ கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின்‌ இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல்‌ விடவேண்டும்‌.


Parimelalagar

பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக.
விளக்கம்:
(பண்பு சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும், அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பது தோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக் கூறும் குண மில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து, அவரைச் சாராதொழிக, இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாந் தொகுத்துக் கூறினார்.