குறள் 911

வரைவின்மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

anpin vilaiyaar porulvilaiyum aaithotiyaar
insol ilukkuth tharum


Shuddhananda Bharati

Wanton women

For gold, not love their tongue cajoles
Men are ruined by bangled belles.


GU Pope

Wanton Women

Those that choice armlets wear who seek not thee with love,
But seek thy wealth, their pleasant words will ruin prove.

The sweet words of elegant braceleted (prostitutes) who desire (a man) not from affection but from avarice, will cause sorrow.


Mu. Varadarajan

அன்பினால்‌ விரும்பாமல்‌ பொருள்‌ காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர்‌ பேசுகின்ற இனிய சொல்‌ ஒருவனுக்குத்‌ துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.
விளக்கம்:
(பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.) --


Manakkudavar

வரைவின்மகளிராவது கணிகையரோடு கலந்தொழுகினால் வரும் குற்றம் கூறுதல். முயக்கத்தில் வரைவின்மையால், வரைவின் மகளிரென்று கூறப் பட்டது. (இதன் பொருள்) அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்,
(என்றவாறு).