குறள் 910

பெண்வழிச்சேறல்

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்

yensaerndhtha naenjchath thidanutaiyaarkku yenjgnyaanrum
paensaerndhthaam paethaimai il


Shuddhananda Bharati

Being led by women

Thinkers strong and broad of heart
By folly on fair sex do not dote.


GU Pope

Being led by Women

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.

The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.


Mu. Varadarajan

நன்றாக எண்ணுதல்‌ பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும்‌ உடையார்க்கு எக்காலத்திலும்‌ மனைவியின்‌ ஏவலுக்கு இணங்கும்‌ அறியாமை இல்லை.


Parimelalagar

எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.
விளக்கம்:
("இடன் இல் பருவத்தும்" [குறள் 218] எனவும், "இடன் இன்றி இரந்தோர்க்கு" [கலித். பாலை.1] எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக் காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப் பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம் மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம், (எ - று ) எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்.