Kural 909
குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்
aravinaiyum aanra porulum piravinaiyum
paenyaeval seivaarkan il
Shuddhananda Bharati
No virtue riches nor joy is seen
In those who submit to women
GU Pope
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives' behests.
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, northose of wealth nor (even) those of pleasure.
Mu. Varadarajan
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
Parimelalagar
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாக.
விளக்கம்:
(புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப்பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின என்பது தோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) அறஞ்செய்தலும், அமைந்த பொருள் செய்தலும், ஒழிந்த காம நுகர்தலும், பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம்,
(என்றவாறு). இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின், இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.