குறள் 908

பெண்வழிச்சேறல்

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்

nattaar kuraimutiyaar nanraatrraar nannuthalaal
paettaangku oluku pavar


Shuddhananda Bharati

Being led by women

By fair-browed wives who are governed
Help no friends nor goodness tend.


GU Pope

Being led by Women

Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.

Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.


Mu. Varadarajan

மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர்‌, தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும்‌ செய்து முடிக்கமாட்டார்‌; அறத்தையும்‌ செய்யமாட்டார்‌.


Parimelalagar

நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம் வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச் செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார் - அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய அறஞ்செய்யவும் மாட்டார்.
விளக்கம்:
('நல்நுதலாள்' என்பதனை, "அமை ஆர் தோள்" (குறள். 906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே அறிந்த ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின், இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்ல நுதலினை யுடையாள் விரும்பியவாறு செய்தொழுகுவார், தம்மோடு நட்டார் குறைதீர்க்கவுமாட்டார்; அவர்க்கு நல்லது செய்யவுமாட்டார். குறை தீர்த்தல் - உற்ற துயரம் தீர்த்தல்.