குறள் 907

பெண்வழிச்சேறல்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து

paennaeval seitholukum aanmaiyin naanutaip
paennae paerumai utaiththu


Shuddhananda Bharati

Being led by women

Esteemed more is women bashful
Than man servile unto her will.


GU Pope

Being led by Women

The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman's law who dwells.

Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.


Mu. Varadarajan

மனைவியின்‌ ஏவலைச்‌ செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத்‌ தன்‌ இயல்பாக உடையவளின்‌ பெண்மையே பெருமை உடையது.


Parimelalagar

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண் இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப் பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து.
விளக்கம்:
('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள் ஏவல் செய்வஈனது நாணின்மை முடித்தற் காதலின், அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் - ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது. ஏவல் செய்வித்துககோடற் சிறப்புத் தோன்றப் 'பெண்ணே' எனப் பிரித்தார்.)


Manakkudavar

(இதன் பொருள்) பெண்டிர் ஏவின் தொழிலைச் செய்தொழுகும் ஆண்மையின், நாணமுடைய பெண்மையே, தலைமை உடைத்தாம்,
(என்றவாறு). இது பிறரால் மதிக்கப்படாரென்றது.