குறள் 905

பெண்வழிச்சேறல்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

illaalai anjsuvaan anjsumatr raenjgnyaanrum
nallaarkku nalla seyal


Shuddhananda Bharati

Being led by women

Who fears his wife fears always
Good to do to the good and wise.


GU Pope

Being led by Women

Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.

He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.


Mu. Varadarajan

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன்‌ எப்போதும்‌ நல்லவர்க்கு நன்மையான கடமையைச்‌ செய்வதற்கு அஞ்சி நடப்பான்‌.


Parimelalagar

இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும் அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால் நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும் அஞ்சாநிற்கும்.
விளக்கம்:
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர், இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும். நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது செய்ய வேண்டும் நாள்களினும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக" (சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.)


Manakkudavar

(இதன் பொருள்) மனையாளை அஞ்சுவான், எஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்லவை செய்தலை அஞ்சும்,
(என்றவாறு). இஃது அறஞ்செய்ய மாட்டானென்றது.