Kural 904
குறள் 904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
manaiyaalai anjsum marumaiyi laalan
vinaiyaanmai veeraeitha linru
Shuddhananda Bharati
Fearing his wife salvationless
The weaklings' action has no grace.
GU Pope
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never beapplauded.
Mu. Varadarajan
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
Parimelalagar
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது.
விளக்கம்:
('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)
Manakkudavar
(இதன் பொருள்) மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன், ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை யெய்துதல் இல்லை,
(என்றவாறு) இது பொருள் செய்ய மாட்டாரென்றது.