குறள் 903

பெண்வழிச்சேறல்

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

illaalkan thaalndhtha iyalpinmai yenjgnyaanrum
nallaarul naanuth tharum


Shuddhananda Bharati

Being led by women

Who's servile to his wife always
Shy he feels before the wise.


GU Pope

Being led by Women

Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.

The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.


Mu. Varadarajan

மனைவியிடத்தில்‌ தாழ்ந்து நடக்கும்‌ இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும்‌ நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத்‌ தரும்‌.


Parimelalagar

இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன் இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்; நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு எக்காலத்தும் கொடுக்கும்.
விளக்கம்:
(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின், அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம் அஞ்சி யொழுகுதலின், அவளை நியமிப்பார் இல்லையாம்; ஆகவே, எல்லாக் குற்றமும் விளையும் என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத் தரும்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) மனையாள் மாட்டுத் தாழ்ந்தொழுகும் இயல்பாகிய கேடு, எல்லா நாளும் நல்லாரிடத்து நாணுதலைத் தரும்,
(என்றவாறு).