குறள் 90

விருந்தோம்பல்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து

moppak kulaiyum anichcham mukandhthirindhthu
nokkak kunalyum virundhthu


Shuddhananda Bharati

Hospitality

Anicham smelt withers: like that
A wry-faced look withers the guest.


GU Pope

Cherishing Guests

The flower of 'Anicha' withers away, If you do but its fragrance inhale;
If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.

As the Anicham flower fades in smelling, so fades the guest when the face is turned away.


Mu. Varadarajan

அனிச்சப்பூ மோந்தவுடன்‌ வாடிவிடும்‌; அதுபோல்‌ முகம்‌ மலராமல்‌ வேறுபட்டு நோக்கியவுடன்‌ விருந்தினர்‌ வாடி நிற்பர்‌.


Parimelalagar

அனிச்சம் மோப்பக் குழையும்-அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது; விருந்து முகம் திரிந்து நோக்கக் குழையும்-விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர்.
விளக்கம்:
('அனிச்சம்' ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) எல்லா மலரினும் மெல்லிதாகிய அனிச்சப்பூ மோந்தாலல்லது வாடாது; விருந்தினரை முகந்திரிந்து நோக்க அவர் வாடுவர்,
(என்றவாறு). இது முகநோக்கி யினிமை கூறவேண்டுமென்றது.