குறள் 899

பெரியாரைப் பிழையாமை

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

yaendhthiya kolkaiyaar seerin itaimurindhthu
vaendhthanum vaendhthu kedum


Shuddhananda Bharati

Offend not the great

Before the holy sage's rage
Ev'n Indra's empire meets damage.


GU Pope

Not Offending the Great

When blazes forth the wrath of men of lofty fame,
Kings even fall from high estate and perish in the flame.

If those of exalted vows burst in a rage, even (Indra) the king will suffer a sudden loss and be entirely ruined.


Mu. Varadarajan

உயர்ந்த கொள்கையுடைய பெரியார்‌ சீறினால்‌, நாட்டை ஆளும்‌ அரசனும்‌ இடைநடுவே முரிந்து அரசு இழந்து கெடுவான்‌.


Parimelalagar

ஏந்திய கொள்கையார் சீறின் - காத்தற்கு அருமையான உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வராயின்; வேந்தனும் இடை வேந்த முரிந்து கெடும் - அவராற்றலான் இந்திரனும் இடைய தன் பதம் இழந்து கெடும்.
விளக்கம்:
(''வேந்தன் மேய தீம்புனல் உலகமும்'' (தொல். பொருள். அகத்.5) என்றார் பிறரும். நகுடன் என்பான் இந்திரன் பதவி பெற்றுச் செல்கின்ற காலத்துப் பெற்ற கணிப்பு மிகுதியால் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய், அதனால் சாபமெய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதனை உட்கொண்டு இவ்வாறு கூறினார். இவை நான்கு பாட்டானும் முனிவரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உயர்ந்த கோட்பாட்டையுடையார் வெகுள்வராயின், இந்திரனும் இடையிலே இற்றுத் தன்னரசு இழக்கும்,
(என்றவாறு). இது பொருட்கேடு வருமென்று கூறிற்று.